மனைவியிடம் கொடுமை படுத்தும் கணவன் : மாமியார்–மைத்துனர் தாக்கப்பட்டதால் பரபரப்பு!
கோவை பீளமேடு பகுதியில், குடும்பத் தகராறு மற்றும் வரதட்சனை பிரச்சினையை அடுத்து மணமகளின் தாய், சகோதரர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கோவை பீளமேடு பகுதியில், குடும்பத் தகராறு மற்றும் வரதட்சனை பிரச்சினையை அடுத்து மணமகளின் தாய், சகோதரர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மலா, 2018ஆம் ஆண்டு பீளமேடு பகுதியைச் சேர்ந்த சற்குணனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின், சற்குணன் பணம், நகை கோரி அடிக்கடி மனைவியை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சற்குணன் 2023 ஆம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், நேற்று சற்குணன், அவரது உறவினர்களுடன் வந்து நிர்மலா, அவரது தாய் ஜெயந்தி, சகோதரர் ஹரிஹரன் ஆகியோரை தாக்கியதாகவும், ஜெயந்தியின் உடையை கிழித்தும் அவமானப்படுத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிர்மலா அளித்த தகவலின் பேரில் பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டாலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.