பூ மார்க்கெட்டில் நள்ளிரவில் குவிந்த கேரளா வியாபாரிகள்

கன்னியாகுமரி;

Update: 2025-09-04 10:24 GMT
குமரி மாவட்டம்  தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. நாளை கேரளாவில் திருவோண பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி தொடங்கி இன்று விடிய விடிய பூ வியாபாரம் மார்க்கெட்டில் களை  கட்டியது. டன் கணக்கில் பல வண்ண பூக்களை வியாபாரிகள் வாங்கி சென்றனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக 1000 டன் பூக்கள் விற்பனைக்காக மார்க்கெட்டில் குவிந்தன. நேற்று ராத்திரி இரவும் 20 லாரிகளில் பூக்கள் வந்தன. கடந்தாண்டை விட இந்த ஆண்டு அதிகம் பூக்கள் விற்பனை ஆகி உள்ளது என வியாபாரிகள் கூறினர்கள் .

Similar News