பள்ளி மாணவியிடம் ஆபாசம் டிரைவருக்கு போக்சோ

குளச்சல்;

Update: 2025-09-04 15:07 GMT
குமரி மாவட்டம்  குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி திங்கள்நகர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 12 வயதில் 8ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். சம்பவ தினம் சிறுமி வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சுபின்ராஜ் (29) என்பவர் தம்பதியின் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வெளியே நின்று கொண்டிருந்த சிறுமையை நோக்கி ஆபாச செய்கை செய்தார். இதை பார்த்த சிறுமியின் தாய்  தட்டி கேட்டு உள்ளார். சிறுமியின் தாயை சுபின் ராஜ்  தாக்க முயன்று,  மிரட்டல் விடுத்துவிட்டார் தப்பி ஓடி விட்டார். சிறுமியின் தாய் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மகளிர் போலீசார் சுபின்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து, இன்று கைது செய்தனர்.

Similar News