போலி முகவரியில் சிம் கார்டு வாங்கிய வழக்கு : மாவோயிஸ்ட் ரூபேஷ் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் !
சிம் கார்டு மோசடி வழக்கில் மாவோயிஸ்ட் ரூபேஷ் மீது நீதிமன்ற விசாரணை தீவிரம்.;
போலி முகவரி கொடுத்து சிம் கார்டு வாங்கிய வழக்கில் கேரளா மாவோயிஸ்ட் ரூபேஷ், கோவை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று பலத்த பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டார். 2015-ம் ஆண்டு கோவை அருகே சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக ரூபேஷ், அவரது மனைவி சைனி உட்பட ஐவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தற்போது ரூபேஷ் மீது கோவை, காந்திபுரம் மற்றும் பொள்ளாச்சியில் போலி முகவரி கொடுத்து சிம் கார்டு வாங்கியதாக மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கின் சாட்சி விசாரணையை நீதிபதி விஜயா ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.