பள்ளியின் முன்பு கழிவுநீர். தொற்று நோய் பரவும் அபாயம்.

மதுரை அருகே பள்ளியின் முன்பு கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது;

Update: 2025-09-05 05:22 GMT
மதுரை அருள்தாஸ்புரம் அசோக் நகர் 2 வது தெரு குழந்தைகளின் மாண்டிசோரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் முன்பு கடந்த பத்து நாட்களுக்கு மேலாக கழிவுநீர் தேங்கியிருப்பதால் பள்ளிக்கு செல்வோர் மற்றும் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் பயன் இல்லை. இப்பிரச்சனையால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News