கேரளா மக்களின் வசந்த விழா என்றழைக்கப்படும் திருவோண பண்டிகை இன்று கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலும் மலையாள மொழி பேசும் மக்களால் ஒண பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் கோவில்களில் ஒண சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாகர்கோவிலில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஒண பண்டிகை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நெல் பரை வைத்து அன்ன விளக்கு ஏற்றப்பட்டது. அத்தப்பூ கோலமிட்டு பெண்கள் பஜனைகள் பாடினார்கள். தொடர்ந்து 18 வகையான சிறப்பு அபிஷேகமும் கூட்டு வழிபாடும் நடைபெற்றது. கேரளா கலாச்சார உடைகள் அணிந்து ஏரளமான பெண்கள் கலந்து கொண்டனர். சக்தி பீட தலைவர் சின்னதம்பி சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானமும் வழங்கினார்.