மாணவி பலாத்காரம் வாலிபர் கைது

குளச்சல்;

Update: 2025-09-05 06:18 GMT
குமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் தனிஷ் (25). இவருக்கு திருமணம் ஆகி மனைவி 10 மாத குழந்தையும் உள்ளது. இவருக்கு  குளச்சல் பகுதியில் கிராமத்தை சேர்ந்த பிளஸ் டூ படித்து வரும் 16 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.  கடந்த ஜூலை மாதம் மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று ஒரு தோப்பில் வைத்து பலாத்காரம் செய்தார். இது குறித்து மாணவியின் தாயார் குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீஸர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தனிஷை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று தனிசை கைது செய்தனர்.

Similar News