வ.உ.சி திருவுருவ படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் மரியாதை

அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை;

Update: 2025-09-05 09:28 GMT
சுதந்திரப் போராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல், வ. உ. சிதம்பரனார் அவர்களின் 154 வது பிறந்தநாளை முன்னிட்டு தில்லை நகரில் உள்ள புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சி. திருவுருவ படத்திற்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் எஸ்.வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளர் ஆர் எஸ் புல்லட் ஜான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News