கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு முகாம்!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.;
கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. மனநலம், எலும்பு மற்றும் குழந்தைகள் நல டாக்டர்கள் பரிசோதனை செய்து, குறைபாடு அளவு குறித்து அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு அடையாள அட்டை, உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், மாவட்டத்தில் வீடு வீடாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதையும், இம்மாத இறுதிக்குள் அதை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.