கோவை: போலீசாருக்கு மேலங்கி வழங்கும் நிகழ்ச்சி !

60 போலீசாருக்கு சிறப்பு மேலங்கி வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது.;

Update: 2025-09-05 12:56 GMT
கோவை மாநகர காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்பநாய் பிரிவு, தடயவியல் பிரிவுகளில் பணியாற்றி வரும் 60 போலீசாருக்கு சிறப்பு மேலங்கி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுவரை சீருடை இன்றி சாதாரண உடையில் பணியாற்றி வந்ததால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை நடத்தும் போது போலீசாரை அடையாளம் காண சிரமம் ஏற்பட்டது. இதனைத் தவிர்க்கும் வகையில் "போலீஸ்" என எழுதப்பட்ட மேலங்கிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கலந்து கொண்டு போலீசாருக்கு மேலங்கிகளை வழங்கினார். தற்போது அந்த பிரிவுகளில் பணியாற்றும் போலீசார், மேலங்கி அணிந்து கடமையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News