யானைகளை தடுக்க உருக்கு கம்பி வேலி – கோவையில் நீதிபதிகள் ஆய்வு!
கோவையில் மேட்டுப்பாளையம், போளுவாம்பட்டி வன எல்லைப் பகுதிகளில் உருக்கு கம்பி வேலி அமைப்பிடங்களை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் பார்வையிட்டனர். விவசாயிகள் உயிர்சேதம், பயிர்சேதம் குறித்து மனு வைத்தனர்.;
கோவை மாவட்டத்தில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதம் விளைவிப்பதைத் தடுக்க வன எல்லையில் உருக்கு கம்பி வேலி அமைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையிலான குழு நேரில் ஆய்வு மேற்கொண்டது. மேட்டுப்பாளையம், போளுவாம்பட்டி வன சரகப் பகுதிகளில் வேலி அமைக்கும் இடங்களை நீதிபதிகள் பார்வையிட்டனர். இந்த ஆய்வில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், வன அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், யானைகள் ஊருக்குள் புகுந்து உயிர்சேதம், பயிர்சேதம் ஏற்படுவதாக தெரிவித்து, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.