எம்எல்ஏவிடம் அடிப்படை வசதி கேட்டு மனு
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்;
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாபிடம் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை தலைவர் உமர் பாரூக் மனு அளித்தார். அதில் மேலப்பாளைம் ஹாஜிரா நகரில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் நீண்ட நாட்களாக ஓரங்கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.