கிள்ளியூர், முஞ்சிறை வட்டத்திற்குட்பட்ட மெதுகும்மல், குளப்புரம், அடைக்காகுழி, சூழால், நடைக்காவு, மங்காடு, வாவறை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் 5 ம் கட்ட முகாம் மரிய கிரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (06.09.2025) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இம்முகாமில் 1500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.சகாய ஸ்டீபன் ராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.