குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து வெள்ள மடம் நோக்கி சென்ற நெல் அறுவடை இயந்திரம் ஏற்றி வந்த வாகனம் தேரூர் வண்டிமலட்சி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சாலை அருகே இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் மின் கம்பம் 2 துண்டாக முறிந்து அறுவடை இயந்திரத்திற்கு மேல் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர்த்தப்பினார். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் மின் வாரிய துணை பொறியாளர் பெருமாள் சம்பவ இடம் விரைந்து சென்று முறிந்து கிடந்த மின் கம்பத்தையும் மாற்றி போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.