நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு சென்றது. அப்போது ஈரடுக்கு மேம்பாலம் நடுப்பகுதியில் சென்றபோது பேருந்தின் மீது பைக் மோதியது. இந்த கோர விபத்தில் பைக்கில் சென்ற மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்குதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.