சாதனை படைத்த அறக்காவலர்கள் குழு
கோபாலசமுத்திரம் அருள்மிகு பசுங்கிளி அய்யன் சாஸ்தா திருக்கோவில்;
திருநெல்வேலி மாவட்ட கோபாலசமுத்திரம் அருள்மிகு பசுங்கிளி அய்யன் சாஸ்தா திருக்கோவிலுக்கு புதிய அறக்காவலர்கள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அறங்காவலர் நிவேக் தலைமையிலான குழுவினர் ஒன்றரை ஆண்டுகளில் 20 லட்சம் ரூபாய் வரை கோவிலின் நிரந்தர வைப்பு நிதி சேமிப்பில் சாதனை படைத்துள்ளனர். இந்த குழுவினருக்கு பொதுமக்கள், பக்தர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.