குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் பிரைட் குமார் மனைவி ஷாலினி (32). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரின்ஸ் குமார் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் பத்மநாபபுரம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஷாலினின் வீட்டில் நுழைந்த பிரின்ஸ்குமார், கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை வாபஸ் பெறுமாறு கூறி அவரை தாக்கி விட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து ஷாலினி தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரின்ஸ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.