முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் 2025-2026ஆம் ஆண்டிற்கான கன்னியாகுமரி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 26.08.2025 முதல் 12.09.2025 வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று ஞாயிற்றுகிழமை அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கபடி விளையாட்டுப்போட்டிகளை இராஜக்கமங்கலம் உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் வினு, விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.