ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்.
10அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்.;
திருச்சி மாவட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட உரையை தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் வழங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது 01.04.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தினைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டும், உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கும், முதுகலை, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதியை களையப்படவேண்டும், தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 243 ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், நாகராஜன் உதுமான் அலி, குமரவேல், பால்பாண்டி, நவநீதன், டேவிட் லிவிங்ஸ்ட்ன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.