மூதாட்டியிடம்தங்கச்சங்கிலி பறிப்பு
கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு;
துவரங்குறிச்சி பொன்னம்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள் (60). இவர் நேற்று மாலை பொன்னம்பட்டி அருகே உள்ள சடவேலாம்பட்டி சாலையில் ஆடுகளை மேய்த்தார். அப்போது அந்த வழியாக இருசக் கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடியே வந்த 2 மர்ம நபர்கள், இப்பகுதியில் சாமி பார்க்கும் இடம் உள்ளதா என்று அவரிடம் கேட்ட வாறு அருகில் வந்து, அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதையடுத்து மணப்பாறை துணை சூப்பிரண்டு காவியா மற்றும் துவரங்குறிச்சி போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மூதாட்டியிடம் நடந்தவற்றை கேட்டறிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.