பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ராமதாஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ராமதாஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...;
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்க்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கட்சி 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாமகவின் தலைவர் அன்புமணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் சற்று நேரத்திற்கு முன்பு அறிவித்திருந்தார். அறிவிப்பு வெளியானதை அடுத்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆ.மோகன்ராஜ், தலைமையில் 20க்கும் மேற்பட்ட ராமதாஸ் ஆதரவாளர்கள் பேருந்து நிலையத்தின் முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க வாழ்க என கோசங்கள் எழுப்பினர்..