ஜெயங்கொண்டம் அருகே கந்து வட்டி கொடுமையால் தற்கொலை கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியை வாங்கிய அசலுக்கு மேல் வட்டி கொடுத்தும் தன்னை துன்புறுத்துவதாக பேசிய வீடியோ வைரல்.

ஜெயங்கொண்டம் அருகே கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியை வாங்கிய அசலுக்கு மேல் வட்டி கொடுத்தும் தன்னை துன்புறுத்துவதாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது;

Update: 2025-09-11 13:52 GMT
அரியலூர், செப்.11- அரியலூர் மாவட்டம் மேல குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மனைவி சத்யா இவர்களுக்கு 16 வயதில் ஹரிஹரன், 11 வயதில் சாய் விக்னேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர் சத்யா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் சத்யா கடந்த ஒன்பதாம் தேதி வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதை அறிந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சத்யாவை சிகிச்சைக்காக சேர்த்தனர் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.இந்நிலையில் சத்யா தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தற்கொலை செய்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு யார் யார் காரணம் எனவும் பேசி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அதில் பல்வேறு காரணங்களுக்காக அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி கவுசல்யா கவிதா அவரது அம்மா மற்றும் அம்பிகா ஆகியோரிடம் வாங்கிய அசலுக்கு மேலாக வட்டி பணம் கொடுத்துள்ளேன் ஆனாலும் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தன்னை டார்ச்சர் செய்வதாகவும் என்னால் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் கடந்த மூன்று நாட்களாக தவித்து வருவதாகவும் பேசி உள்ள சத்யா உங்களை விட்டு செல்வதற்கு தன்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என கண்ணீர் மல்க கணவரிடம் பேசியதும் கண் கலங்க வைத்தது சத்யா பேசிய வீடியோவை வாக்குமூலமாக கொண்டு ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Similar News