அருப்புக்கோட்டை வழியாக தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடிக்கு செல்லும் வாகனங்களில் இளைஞர்கள் தொங்கியபடியும் முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் அதி

அருப்புக்கோட்டை வழியாக தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடிக்கு செல்லும் வாகனங்களில் இளைஞர்கள் தொங்கியபடியும் முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி*;

Update: 2025-09-11 17:47 GMT
அருப்புக்கோட்டை வழியாக தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடிக்கு செல்லும் வாகனங்களில் இளைஞர்கள் தொங்கியபடியும் முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி காவல்துறை அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் சிரமம் அடைந்த வியாபாரிகள் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் செல்வது வழக்கம். இதில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாகத்தான் பரமக்குடி செல்ல முடியும். இவ்வாறு வாகனங்களில் அருப்புக்கோட்டை வழியாக செல்லும் இளைஞர்கள் வாகனங்களில் தொங்கியபடியும் அதிக அளவு கூச்சலிட்டு கொண்டும் பொது மக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் சென்றனர். வாகனங்களில் கதவைத் திறந்து அதில் தொங்கியபடி ஆபத்தான வகையில் இளைஞர்கள் பயணம் செய்வது பொதுமக்கள் இடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.‌ மேலும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து கடைகளையும் காவல்துறையினர் மூட அறிவுறுத்தி உள்ளதால் வணிகர்களும் சிரமம் அடைந்துள்ளனர். போலீசாரின் அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் காந்திநகர், திருச்சுழி ரோடு, ஆத்திபட்டி, விருதுநகர் ரோடு மற்றும் திருச்சுழி நகரப் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து இதுபோன்ற தலைவர்களின் நினைவிடத்திற்கு வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் முக சுழிப்பை ஏற்படுத்தும் வகையிலும் செல்வதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்

Similar News