மறைந்த முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளருமான சீத்தாராம்யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு*

மறைந்த முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளருமான சீத்தாராம்யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.;

Update: 2025-09-12 09:54 GMT
அரியலூர், செப்.12- மறைந்த முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவரும், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளருமான சீத்தாராம்யெச்சூரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு மற்றும் உடல் தானம், கண் தானம் நிகழ்ச்சி அரியலூர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  இதில் அரியலூர் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் உடற்கூறாய்வு மருத்துவர்  நெடுஞ்செழியன் கலந்து கொண்டு சீத்தாராம்யெச்சூரியின் தியாகம், அர்ப்பணிப்பு,  கட்சி பணி, உலக நாடுகளின் பிரச்சனைக்கு தீர்வு கண்டது போன்ற ஏராளமான விவரங்களை அற்புதமாக பேசினார். நிகழ்ச்சியில் சீத்தாராம்யெச்சூரியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், பி.துரைசாமி, ஏ.கந்தசாமி, எம்.வெங்கடாசலம்,  கே.கிருஷ்ணன், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.பத்மாவதி, ஆர்.ரவீந்திரன், எஸ்.மலர்கொடி,       கே.குணா, எம்.சந்தானம், ஒன்றிய செயலாளர்கள் செந்துறை              கு.அர்ஜுனன், திருமானூர்.              எஸ்.பி.சாமிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அரியலூர் ஒன்றிய செயலாளர் அ.அருண்பாண்டியன்,  வரவேற்று பேசினார்.மூத்த தலைவர் ஆர்.சிற்றம்பலம் மற்றும் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தனலட்சுமி, பாக்கியம், செண்பகவல்லி,    கே.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு உடல் தானம் செய்ய விருப்பமான 15 தோழர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் கண் தானம் செய்வதற்கான சம்பந்தப்பட்ட டாக்டரை அனுப்பி வைக்கிறோம் என்று மருத்துவர் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் 10 பெண்கள் உட்பட 30 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News