சேதுபாவாசத்திரம் மாணவர்களுக்கு வேளாண் கண்டுணர்வு சுற்றுலா 

சுற்றுலா;

Update: 2025-09-13 13:53 GMT
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக, அட்மா திட்டத்தின் கீழ், பள்ளத்தூர், பெருமகளூர், கரிசவயல், மணக்காடு மற்றும் குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் முடச்சிக்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மாவட்ட அளவில் கண்டுணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.  சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) ஜி.சாந்தி மாணவர்களை வழி அனுப்பி வைத்தார் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் இயற்கை வேளாண் பண்ணையத்தை  நேரடியாக மாணவர்கள் பார்வையிட்டு, இயற்கை வேளாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி தெரிந்து கொண்டனர்.  மாணவர்களுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி, புதிய ரகங்கள் அதன் பயன்கள் பற்றி இயற்கை வேளாண் பண்ணையம் விவசாயி கணேசன் மாணவர்களுக்கு விரிவாக பயிற்சி அளித்தார்.  பஞ்சகவ்யம், மீன் அமிலம், ஜீவாமிர்தம், ஐந்து இலை கரைசல், இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசல் பூச்சி விரட்டி மற்றும் ஏழு வகை புண்ணாக்குகள், இயற்கை உரங்கள் உயிர் உரங்கள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார் பஞ்சகவ்யம் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.  இக்கண்டுணர்வு பயிற்சியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, சேதுபாவாசத்திரம் வட்டார அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் மோ.சுரேஷ் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்படுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சி.ஜெயக்குமார், ஆ.தமிழழகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News