பூதலூர் வடக்கு ஒன்றியத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு தினம் 

நினைவேந்தல்;

Update: 2025-09-13 13:56 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முல்லைக்குடி கிளையில், அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கட்சிக் கொடியேற்றி, தோழர் சீத்தாராம் யெச்சூரி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஒன்றிய அமைப்புக் குழு தோழர்கள் பி.முருகேசன், வழக்கறிர் எம்.கே.சேகர், மூத்த தோழர் துரைராஜ், கிளைச் செயலாளர் தர்மராஜ், காசிநாதன், பாரதி, கோபிநாத், மதன், சதீஷ் குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.  பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளியிலும் தோழர் சீத்தாராம் யெச்சூரி  திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.அபிமன்னன், ஒன்றிய அமைப்புக்குழு உறுப்பினர்கள் பி.முருகேசன், வழக்கறிஞர் எம்.கே.சேகர், ரமேஷ், திருஞானசம்பந்தம், மூத்த தோழர்கள் காளிதாஸ், சிவசாமி, துரைராஜ் மற்றும் கிளை தோழர்கள் கலந்து கொண்டு தோழர் யெச்சூரி அவர்களின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Similar News