இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர் சந்திப்பு
இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர் சந்திப்பு;
திருப்பத்தூர் மாவட்டம் நானும் ஒரு ஏழை மாணவனாக அரசு பள்ளியில் படித்து விஞ்ஞானியாக மாறியவன் அதற்கு ஒரே காரணம் அறிவியல் சார்ந்து எனக்கு இருந்த கேள்வியும் நான் படித்த கல்வியும் தான் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சுமார் 15,000 பள்ளி மாணவ மாணவர்களிடையே செயற்கை நுண்ணறிவு புத்தாக்கம் குறித்து கலந்துரையாடியதை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேச்சு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வாணியம்பாடி ரோடு அருகே அமைந்துள்ள தூய நெஞ்சக் கல்லூரியின 75வது பவள விழாவை முன்னிட்டு அண்ணாமலை அறக்கட்டளையும் தூய நெஞ்சக் கல்லூரியும் இணைந்து நடத்திய செயற்கை நுண்ணறிவு குறித்த புத்தாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ மாணவர்கள் தனியார் பள்ளி மாணவ மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் என சுமார் 15,000 மாணவ மாணவிகளுக்கு சுமார் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ரோபோடிக் கண்காட்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கல்லூரியின் கலை அரங்கத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு குறித்த புத்தாக்க நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த பயன்பாடு அதிகரிப்பது குறித்தும் அதன் தேவை குறித்தும் மாணவ மாணவிகளிடையே கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. நானும் ஒரு ஏழை மாணவன் தான் அரசு பள்ளியில் படித்தாலும் அறிவியல் சார்ந்த துறை வேண்டுமா ஆராய்ச்சி வேண்டுமா என்கிற கேள்வியும் நான் பற்றிக்கொண்ட கல்வியும் தான் என்னை விஞ்ஞானியாக மாற்றி உள்ளது. எனவே கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகிறது மாணவர்கள் தங்களை இணைத்துக் கொண்டால் அது அறிவியல் என்கிற கடலில் கொண்டு போய் சேர்த்து விடும் என்றும் என்னை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்பட மாணவர்களிடையே அறிவுரைத்து இருக்கிறேன் அது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் ரத்தமும் சதவீதமாக இருக்கின்ற ஊடகமும் இதைக் கொண்டு போய் மாணவர்களிடையே சேர்க்க வேண்டும் என்னையும் ஊடகங்கள் தான் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது எனவே அது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன் அதேபோல் குலசேகரப்பட்டினத்தில் ஒரு மாற்று ஏவுதளம் இந்தியாவுக்கு வரப்போகிறது. ஸ்ரீ ஹரி போட்டோவை விட மிகச் சிறப்பான ஒரு ஏவுதலமாக இது அமைய இருக்கிறது. சிறிய ரக ஏவுகணையில் பெரிய செயற்கைக்கோளை வைத்து அனுப்ப முடியும். அது மட்டுமல்ல அது வாரத்திற்கு ஒன்று என்று வருடம் முழுவதும் அனுப்பக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதை ஸ்ரீஹரி கோட்டாவிலோ அல்லது மற்ற இடங்களிலோ செயல்படுத்த முடியாது. தமிழக அரசின் மூலம் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஏவுதளம் அமைக்கப்படும் பொழுது விண்வெளி துறை சார்ந்த தொழில் வாய்ப்புகள் வளர வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் ககன்யாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அது சார்ந்து நிறைய கவனம் தேவை இருக்கிறது ஏனென்றால் மனிதனை அனுப்பி வைத்து மீண்டும் மனிதனை கொண்டு வர வேண்டும். அதேபோல் ஆளில்லாத விண்கலமும் அனுப்பப்பட்டு பரிசோதிக்க கூடிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள் என்று கூறிய அவர் மேலும் திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை காவலூர் பகுதியில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய தொலைநோக்கி குறித்த கேள்விக்கும் பரிணாம வளர்ச்சி குறித்த கேள்விக்கும் பல்வேறு கருத்துக்களை கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் வி ஐ டி வேந்தர் விஸ்வநாதன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் பள்ளி கல்லூரி சார்ந்த ஆசிரியர் பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.