தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி

2027-ல் மணிப்பூரில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பிரதமருக்கு மணிப்பூரை நினைவூட்டுவதில் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.;

Update: 2025-09-13 14:58 GMT
மணிப்பூர் பயணம் தொடர்பான பிரதமர் மோடியின் பதிவை மேற்கோள் காட்டி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. பிரதமர் இறுதியாக மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்பதை அவருக்கு நினைவூட்டுவதில் மனிதாபிமானம் தோற்றுவிட்டது. 2027 மணிப்பூர் தேர்தல் ஏற்பாடுகள் அதில் வெற்றி பெற்றுவிட்டது எனத் தெரிவித்துள்ளார்

Similar News