மத்திய அரசும், மாநில அரசும் மக்களை ஏமாற்றுவதில் ஒரே பரம்பரை அரியலூரில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் விமர்சனம்

அரியலூரில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மத்திய அரசும், மாநில அரசும் மக்களை ஏமாற்றுவதில் ஒரே பரம்பரை என விமர்சித்து பேசினார்;

Update: 2025-09-14 12:09 GMT
அரியலூர்,செப்.14- மக்களை ஏமாற்றுவதில் மத்திய பாஜக அரசும், மாநில திமுக அரசும் ஒரே பரம்பரையை சேர்ந்தவர்கள் என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தெரிவித்தார். அரியலூர் அண்ணா சிலை அருகே, சனிக்கிழமை இரவு அவர்  மேற்கொண்ட பிரசாரத்தில் பேசியது: திருச்சியில் பேசியபோது மைக் பழுதானதால் அதனை சரிசெய்துவிட்டு வருவதற்கு சற்று தாதமாகிவிட்டது. நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்காகவும், உங்களுக்கு உழைக்கவுமே அரசியலுக்கு வந்துள்ளேன். பணம் சம்பாதிக்க நான் அரசியலுக்கு வரவில்லை. நான் மரியாதையாக பேசினால் கூட தவறாக எடுத்து கொள்கின்றனர். அண்ணா சொன்னது போல் வாழ்க வசவாளர்கள் என நினைத்துக்கொண்டு செல்வோம். மத்தியில் ஆட்சி செய்யும் பாசிச அரசையும், மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்துள்ளேன். பிகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயரை நீக்கி விட்டனர். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது உங்களது ஆட்சி முடியபோகுது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசியம். ஒரே நேரத்தில் தில்லு முல்லு செய்யவே இதை நடைமுறைபடுத்த மத்திய அரசு நினைக்கிறது. எனவே, இதனை தவெக எதிர்க்கிறது. திமுக அரசு 505 தேர்தல் அறிக்கைகளை அறிவித்தது. அதில், நீட்தேர்வு ரத்து, அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை, காஸ் விலை ரூ.100 குறைப்பு, டீசல் விலலை ரூ.3 குறைப்பு, வருசத்துக்கு 10 படித்த இளைஞர்களுக்கு வேலை, மாதந்தோறும் மின்கட்டணம் என பல்வேறு அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை என பட்டியலை அறிவித்தார். தங்களை மைடியர்.... என அழைத்தால் உங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது. இப்படி கதை விடுறிங்களே சிஎம் சார் என்றார். ரீலஸ் வேறு, ரியாலிட்டி வேறு என நீங்களே சொல்லிவிட்டு நீங்களே ரீல்ஸ் விடுறீங்க. அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை சிமென்ட், முந்திரி, பட்டாசு உற்பத்தி நடக்கிறது. இந்த தொழில்களை மேம்படுத்த அரசு எந்த யோசனையும் செய்யவில்லை. சிமென்ட் ஆலைகளால் மாசு அதிகளவு உள்ளது. அதனை கட்டுப்படுத்தவில்லை. முந்திரி தொழிற்சாலை அமைக்கவில்லை. ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தை முறையாக பராமரிக்க வேண்டும். மறுதையாற்றில் தடுப்பணை கட்டவில்லை. அரியலூர் - ஜெயங்கொண்டம் -சிதம்பரம் ரயில் பாதை, ஜெயங்கொண்டம் - கும்பகோணம் ரயில் பாதை அமைக்க மக்களின் கோரிக்கை என்ன ஆச்சு. போக்குவரத்துத்துறை அமைச்சர் உள்ள இந்த மாவட்டத்தில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. செய்வோம் என சொன்னார்களே செய்தார்களா? என கேள்வி எழுப்பினார். மத்திய அரசு செய்வது துரோகம் எனில், நீங்கள் செய்வது நம்பிக்கை மோசடி. இது இரண்டும் ஏமாற்று வேலை, ஜனநாயக குற்றம். இப்படி ஏமாற்றுவதில் இருவரும் ஒரே வகையறாதான். முன்னாடி வரை ஒன்றிய பிரதமர், தற்போது இத்திய பிரதமர். இப்படி மாற்றி மாற்றி பேசுவதில் நமது சிஎம் ரொம்ப பிரிலியண்ட். இப்போது புரிகிறதா. மறைமுக உறவுக்காரர்கள் என நாம் ஏன் சொல்கிறோம் என்று. தமிழக வெற்றிக் கழகத்தின் வேலை, ஏதோ ஆறுதலையும் தேர்தலையும் மட்டும் சொல்லிவிட்டு எல்லா விஷயத்திலும் குடும்ப சுயநலத்திற்காக கொள்ளை அடிப்பதிலும், தி.மு.க. மாதிரி மக்களை ஏமாற்றுகிற வேலையை நாங்கள் செய்யவே போவதில்லை. தீர்வை நோக்கி போவதும், தீர்வு காண்பதும் மட்டும்தான் தமிழக வெற்றிக்கழகத்தில் வேலை. நமது தேர்தல் அறிக்கையில் தெளிவாக சொல்வோம், அதனைசெய்வோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, எது உண்மையோ அதை மட்டும்தான் சொல்லுவோம். ஆனால் கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், அடிப்படை சாலை வசதி, மின்சாரம் என்று அடிப்படைத் தேவைகளை சமரசமே இல்லாமல் நிறைவேற்றுவோம். பெண்கள் பாதுகாப்பில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் சமரசமே கிடையாது. ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம், இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சி என அந்த தீர்வை நோக்கிச் செல்வதுதான் நமது லட்சியம். அந்த லட்சியத்தை அடைவோம். அடைந்தே தீருவோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்றார். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதிக்கு சென்றார். உடன் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த், மாவட்டச் செயலர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News