அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை டி எம் கோர்ட் பகுதியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
மதுரை டி. எம் கோர்ட் பகுதியில் இன்று ( செப் .15) மாலை அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் கடந்த 26 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தீர்வு காண வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.