தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 25 மாத பணப்பயன் வழங்காமல் இருப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2025-09-15 13:30 GMT
அரியலூர், செப்.15- ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 25 மாதமாக பணப் பயன்களை வழங்காமல் இருப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உணவு இடைவேளையின் போது அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் ராகவன் தலைமையில் நடைபெற்றது . முன்னதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலக சங்கத்தின் நிர்வாகி தாமோதரன் வரவேற்று பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 25 மாதமாக பணப் பயன்களை வழங்காமல் இருப்பதை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முடிவில் அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ஷர்மிளா நன்றி கூறினார்.

Similar News