கல்வி கடன் வழங்கும் முகாம்

மதுரையில் நாளை கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.;

Update: 2025-09-15 15:18 GMT
மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கிகள் துறை இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் முகாம் நாளை செவ்வாய்க்கிழமை (16.09.2025) மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடைபெற உள்ளது முகாமில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்கின்றன. இதில் மாணவ, மாணவியருக்கான கல்விக் கடன் தொடர்பான ஆலோசனைகள், தேவையான ஆவணங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்படும். மேலும், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட அன்றே கல்விக் கடனுக்கான பரிந்துரை மேற்கொள்ளப்படும். இதற்குமுன் “வித்யா லக்ஷ்மி கல்விக் கடன் திட்டம்” (Vidya Lakshmi Education Loan Scheme) இணையதளத்தில் பதிவுசெய்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு நாளை கல்விக்கடனுக்கான அனுமதி வழங்கப்படும்.

Similar News