போதமலை பகுதிக்கு தற்காலிக மண் சாலையில் பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி..

போதமலை பகுதிக்கு தற்காலிக மண் சாலையில் பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி;

Update: 2025-09-15 15:35 GMT
ராசிபுரம் அடுத்த போதமலை பகுதிக்கு தார் சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் தற்காலிக மண் சாலையில் பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி... தொடர்ந்து கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளிலும் ஆய்வு... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போதமலை பகுதியில் கீழூர்,மேலூர், கெடமலை உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு சுமார் 140 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக வடுகம் முதல் கீழூர் பகுதி வரை தற்காலிக மண் சாலை ஆனது அமைக்கப்பட்டுள்ளது. சாலையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி ஆகியோர் தற்காலிக மண் சாலையில் காரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கீழூர் கிராம பகுதி மக்களை சந்தித்து பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தனர். அப்போது பொதுமக்கள் முதற்கட்டமாக சாலை அமைக்கும் பணி ஆனது நடைபெற்று வருவது வரும் நிலையில் கீழூர் சுற்றி உள்ள பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருவதாகவும், அதனை எடுத்து வருவதற்கு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும் கீழூர் பகுதியில் கிணறு,பட்டா, கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நிலையை அதனை நிறைவேற்றுவதாக தெரிவித்தனர்... அதனைத் தொடர்ந்து வடுகம் ஊராட்சி பகுதியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் சிவகாமி என்பவர் புதிதாக வீடு கட்டிய நிலையில் அதனை தலைமை கூடுதல் செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டு வீட்டில் உள்ளே பார்வையிட்டார். தொடர்ந்து அதே பகுதியில் வள்ளி என்பவரை புதிதாக வீடு கட்டு வரும் நிலையில் அங்கு கட்டுமான பணிகளை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது இன்டெர்லாக் செங்கல் மூலம் கட்டுமான பணி நடைபெறுவதை குறித்து கேட்டறிந்தார். அதன் நன்மைகளையும், தீமைகளிலும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து அதனை வீடியோவாக பதிவு செய்து இது நல்ல முறையில் உள்ளது என அதிகாரிகளிடம் கூறிச் சென்றார்.நிகழ்ச்சியில் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...

Similar News