திருப்பத்தூர் அருகே சொத்துக்காக தாயை இரும்புராடால் தலையில் தாக்கி கொலை!
திருப்பத்தூர் அருகே சொத்துக்காக தாயை இரும்புராடால் தலையில் தாக்கி கொலை!;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே சொத்துக்காக தாயை இரும்புராடால் தலையில் தாக்கி கொலை மகன் வெறி செயல்! ஏற்கனவே தந்தையை கத்திரிக்கோலால் 14 இடங்களில் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது தாயை கொலை செய்ய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது* திருப்பத்துார் மாவட்டம்,கந்திலி அருகே கசிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம்(64), இவருடைய மனைவி வெங்கடேஸ்வரி (54) இவருக்கு வெற்றிச்செல்வன் மற்றும் கோமதி என்ற பிள்ளைகள் உள்ளன. மேலும் வெற்றி செல்வன் சிஏ முடித்து சென்னையில் உள்ள ஆடிட்டரிடம் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஆதிமூலத்துகு சென்னையில் சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. அந்த வீட்டை விற்று பணத்தை தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கி தர வேண்டும் என அவ்வப்போது தந்தையிடம் தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மீண்டும் ஆதி மூலம் நடத்தி வந்த டைலர் கடைக்குச் சென்ற வெற்றிச்செல்வன் திரும்பவும் தகராறில் ஈடுபட்டுள்ளார் அதற்கு அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன் தாய் வெங்கடேஷ்வரி கண் எதிரே தந்தை ஆதிமூலத்தை கடையில் இருந்த கத்தரிக்கோலை கொண்டு 14 இடங்களில் சரமாரியாக கொடூரமாக குத்தி அங்கிருந்து தப்பி சென்றார். இந்த நாள் பயந்து போன ஆதிமூலம் மற்றும் வெங்கடேஸ்வரி கசிநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து திருப்பத்தூர் நகர் பாவுசா நகரில் உள்ள மற்றொரு சொந்தமான வீட்டில் குடியேறி வசித்து வந்தனர். இந்த நிலையில் திரும்பவும் நேற்று இரவு வெற்றிச்செல்வன் தனது அம்மாவை பார்க்க வந்துள்ளார் இப்போது திரும்பவும் சொத்து காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இங்கிருந்தால் பிரச்சனை ஏற்படும் என நினைத்து ஆதிமூலம் அங்கிருந்து கசிநாயக்கன்பட்டியில் உள்ள மற்றொரு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வெற்றிச்செல்வன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வெங்கடேஸ்வரியை இரும்பு ராடால் தலையில் பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் இன்று காலை ஆதிமூலம் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்த கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசர்க்கும் தகவல் தெரிவித்தார். பின்னர் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து எஸ்பி சியாமளாதேவி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார் மேலும் அவருடைய தலைமையில் தனி படைகள் அமைக்கப்பட்டு தப்பியோடிய வெற்றி செல்வனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சொத்துக்காக தந்தையை ஏற்கனவே குத்தி கொலை செய்ய முயன்ற நிலையில் தற்போது தாயைக் கொன்ற சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.