ஜெயங்கொண்டம் கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்.
ஜெயங்கொண்டம் கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை அரியலூர் மாவட்ட கலெக்டர் பொ.ரத்தினசாமி தொடங்கி வைத்தார்.;
அரியலூர், செப்.17 - ஜெயங்கொண்டம் கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை அரியலூர் மாவட்ட கலெக்டர் பொ.ரத்தினசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ ஆப் டெக்ஸ் கடந்த 90 -ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.மேலும் கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறை படுத்தி வருகிறது. இதில் புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகள், கோவை கோர காட்டன் சேலைகள், கூரை நாடு புடவைகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள் லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உரைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச் சீலைகள், மிதியடிகள், நைட்டிகள் மாப்பிள்ளை செட்டு மற்றும் ஏற்றுமதி ரகங்கள் என ஏராளமாக தரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை அரியலூர் மாவட்ட கலெக்டர் பொ.ரத்தினசாமி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் நாகராஜன், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் கோபி, விற்பனை நிலைய மேலாளர் பொன்னி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.