ராசிபுரத்தில் பாமக சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி...

ராசிபுரத்தில் பாமக சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி...;

Update: 2025-09-17 14:45 GMT
மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க மாநில கௌரவத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி அவர்களின் ஆலோசனை படி புதன்கிழமை மாலையில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி, நினைவு அஞ்சலி மற்றும் வீரவணக்கம், செலுத்தப்பட்டது. ராசிபுரம் நகரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் 21 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பாமக மாவட்ட செயலாளர் ஆ.மோகன்ராஜ் , தலைமை வகித்தார். வரவேற்புரை வன்னியர் சங்க நகர செயலாளர் கே.கே.மாரிமுத்து , மற்றும் முன்னிலையாளகள் பாமக நகர தலைவர் பூக்கடை மாது, பாமக நகர செயலாளர் கந்தசாமி ,மாவட்ட துணை செயலாளர் பேட்டரி,மாவட்டத் துணைத் தலைவர் கட்டனாச்சம்பட்டி ம.மாரியப்பன் , கணேசன், மாவட்ட ஊடக பேரவை வன்னியரசு , பெருமாள் கவுண்டம்பாளையம் முருகேசன், தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, சேந்தமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் டி. அபினேஷ் குமார், சாரதி, பேளுக்குறிச்சி பாஷா பாய், ஸ்டுடியோ குமார், கூட்டுறவு செல்வம், பூக்கடை கௌதமன், பூக்கடை ஹரிகரன், பூக்கடை கலைக்கண்ணன், சேந்தமங்கலம் ஒன்றிய தலைவர் மணி, மற்றும் பன்னீர், சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், பாமக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி புகழ் வணக்கம் கோஷங்கள் எழுப்பினர்.

Similar News