தூத்துக்குடியில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம்

தூத்துக்குடியில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம்;

Update: 2025-09-18 10:56 GMT
தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா மற்றும் ஏ.வி.எம் மருத்துவமனை சார்பில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் ஏ.வி.எம் மருத்துவமனை கூட்ட அரங்கில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் ஆ.சங்கர் கூறியதாவது :  உலக சுகாதார சபை தீர்மானத்தின்படி ஆண்டு தோறும் செப்டம்பர் 17 அன்று உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு புதிதாக பிறந்த குழந்தைக்கும் பாதுகாப்பான கவனிப்பு என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு இந்த தினம் அனுசரிக்கப்பட்டது. குழந்தைகளை மையமாக கொண்ட பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றலாம் எனக் கூறினார்.  நிகழ்ச்சியில் ஏ.வி.எம் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி லெட்சுமணன், மருத்துவர் கணேஷ் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். குழந்தைகள் மருத்துவ நிபுணர் ராதா கிருஷ்ணன் கருத்துரை வழங்கினார். உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாஸ் மாரிமுத்து பரிசுகள் வழங்கினார். மருத்துவர் கைலாசம் நன்றி கூறினார்.

Similar News