சூளகிரி அருகே ஆம்னி பஸ் மோதி கார், டிராக்டர்,டூவீலர் சேதம்.
சூளகிரி அருகே ஆம்னி பஸ் மோதி கார், டிராக்டர்,டூவீலர் சேதம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள அட்டகுறிக்கி என்ற இடத்தில் தனியார் பஸ் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி கார், டிராக்டர் மற்றும் டூவீலர்மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். காவல்துறையினர் இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.