பர்கூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு.
பர்கூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சின்னகாரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுவாமிநாதன் (55). விவசாயி. இவரது கறவை மாடு நேற்று மாடு மற்றும் கன்றுக்குட்டியை விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய விவசாய நிலத்தில் இருந்த உள்ள 60 அடி ஆழ முள்ள விவசாய கிணற்றில் கன்றுக்குட்டி தவறி விழுந்தது. தகவல் அறிந்து வந்த பர்கூர் தீயணைப்பு துறையினர் வந்து பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி இறங்கி கிணற்றில் தத்தளித்த கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.