ஏ.டி.எம்,மில் தவறுதலாக வந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைப்பு.
ஏ.டி.எம்,மில் தவறுதலாக வந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம் மையத்தில் அந்த பகுதியை இந்திராநகரைச் சோ்ந்த விஸ்வநாதன் (73) என்பவா் நேற்று தனது ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் எடுக்க முயன்றார். ஆனால் பணம் வரவில்லை. அதன்பிறகு அந்த ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்ற உப்பாரப்பட்டியைச் சோ்ந்த தொழிலாளி ஜெயக்குமார் (34) தனது ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றார். அப்போது, இயந்திரத்திரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் நோட்டுகள் வெளியே வந்தது. அந்த பணத்தை ஊத்தங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து வங்கி உதவியுடன் விசாரணை நடத்திய போலீசார் பணத்தை விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனா். பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஜெயக்குமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.