அரசு சுகாதார மையத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை!
அரசு சுகாதார மையத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை!;
தூத்துக்குடி மடத்தூர் அரசு மருத்துவ மனை சுகாதார மையத்தில் தீயணைப்பு மீட்புப்பணித் துறை மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவின் படி சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் போக்குவரத்து அலுவலர் லெ.புன்னவன கட்டி முன்னிலையில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இதில், ஆரம்பகட்ட தீயை எவ்வாறு அணைப்பது, தீயணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது, தீ மேலும் பரவாமல் எவ்வாறு தடுப்பது, தீயிலிருந்து எவ்வாறு தப்பிப்பது? காயம் அடைந்தவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஏட்டு யோகமணி சங்கர் மற்றும் சக்திவேல், அஜித், சாமுவேல், அந்தோணி ராஜ், முருகேசன் ஆகிய தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த பயிற்சியில் மருத்துவமனை செவிலியர்களுக்கும், பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மருத்துவ அலுவலர் டாக்டர் டெய்சி நன்றியுரையில் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு வழங்கினார்.