சிறப்பு தீவிர திருத்த வரைவு வாக்குச்சாவடி கள் பட்டியல் வெளியீடு
தூத்துக்குடி சிறப்பு தீவிர திருத்த வரைவு வாக்குச்சாவடி கள் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் வெளியீடு தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது கூடுதலாக 237 வாக்குச்சாவடிகள் உருவாக்கபட்டு மொத்தம் 1867 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன;
தூத்துக்குடி சிறப்பு தீவிர திருத்த வரைவு வாக்குச்சாவடி கள் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் வெளியீடு தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது கூடுதலாக 237 வாக்குச்சாவடிகள் உருவாக்கபட்டு மொத்தம் 1867 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் அடிப்படையில் 7, 7,28,026 ஆண் வாக்காளர்களும், 7,62,166 பெண் வாக்காளர்களும் 233 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14, 90, 425 பேர் வாக்காளர்களாக உள்ளனர் இந்நிலையில் தேர்தல் ஆணையம் 1200 வாக்காளர்கள் மட்டுமே ஒரு வாக்கு சாவடியில் இருக்க வேண்டும் அதற்கு மேல் உள்ள வாக்காளர்கள் இருந்தால் வேறு வாக்குச்சாவடிக்கு மாற்ற வேண்டுமென அறிவுறுத்தி இருந்தது இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக உள்ள வாக்காளர் இருக்கும் வாக்குச்சாவடிகளுக்கு பதிலாக புதிதாக வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டன இதை தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரரும் மாவட்ட தேர்தல் அதிகாரி மாண இளம் பகவத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 237 வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 1867 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன இதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் எஸ் ஐ ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசனை நடைபெற்றது மேலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு வாக்குச்சாவடிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது முன்னதாக மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான இளம் பகவத் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறை சீல் உடைக்கப்பட்டு அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு காண்பிக்கப்பட்டது