சூளகிரி: மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு

சூளகிரி: மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு;

Update: 2025-09-19 08:01 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள உத்தனப்பள்ளியில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அலுவலக வளாகத்தில் புதிதாக உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி கலந்து கொண்டு அலுவலக பெயர் பலகையை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில் மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.

Similar News