தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்;

Update: 2025-09-19 09:36 GMT
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசுகையில், ஆட்சியர், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதுடன் வடகிழக்கு பருவமழையும் அதிகமாக அமையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதை குறிப்பிட்டார். எனவே, விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் பருவமழைக்கு ஏற்ற வகையில் பயிர்களை தேர்வு செய்து பயிரிட வேண்டும் என்றும், அதிக மழையால் பாதிக்கக்கூடிய பயிர்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும், 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட பெருவெள்ளம் போன்ற சூழ்நிலைகள் ஏற்படாதபடிக்கு, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

Similar News