திருநங்கைகள் சாலை மறியல். அரை மணி நேரத்திற்கு மேல் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு.

திருநங்கைகள் சாலை மறியல். அரை மணி நேரத்திற்கு மேல் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு.;

Update: 2025-09-19 10:42 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் திருநங்கைகள் குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கைகள் சாலை மறியல். அரை மணி நேரத்திற்கு மேல் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் தர்ஜிபேட்டை துரைசாமி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர் நேற்று இரவு முதல் கனமழை பெய்ததால் ஏரியில் செல்லக்கூடிய மழை நீர் கால்வாய் வசதிகள் இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இன்று திடீரென 50-க்கு மேற்பட்ட திருநங்கைகள் சென்னை - பெங்களூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் படுத்துக்கொண்டு அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி துறையினர் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல் தற்காலிகமாக கைவிட்டனர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அங்கு பரபரப்பான சூழல் நிலவியது..

Similar News