கெலமங்கலம்: லாரி-டூவீலர் மோதி விபத்து அரசு மருத்துவமனை மருத்துவர் பலி.
கெலமங்கலம்: லாரி-டூவீலர் மோதி விபத்து அரசு மருத்துவமனை மருத்துவர் பலி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்துள்ள நாகமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றிவருபவர் பூவரசன்(26) அங்கு மருந்தாளுனராக வேலை செய்பவர் பிரபு(27) இவர்கள் 2 பேரும் உள்ளு குறுக்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாலை சென்றனர். அப்போது ராயக்கோட்டை சாலையில், முத்தம்பட்டி அருகே எதிரே வந்த லாரியும் டூவீலரும் மோதிக்கொண்டன. இதில் டாக்டர் பூவரசன் சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பிரபுக்கு தலையில் படுகாயமடைந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.