ஊத்தங்கரை அருகே பெண் குழந்தையுடன் பெண் மாயம்.

ஊத்தங்கரை அருகே பெண் குழந்தையுடன் பெண் மாயம்.;

Update: 2025-09-20 01:03 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள காமாட்சி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஜீவிதா(21) இவருக்கு திருப்பத்துார் மாவட்டம் விஷமங்கலத்தை சேர்ந்த அசோக் என்பவருடன் திருமணமாகி, இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது நிலையில் கணவருடன் கோபித்து கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் கடந்த, 17-ம் தேதி குழந்தையுடன் வெளியில் சென்றவர். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று பெண்ணின் தாய் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News