போளூர் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு.
சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக டிஜிபி வெங்கட்ராமன் போளூர் காவல் ஆய்வாளர் அல்லிராணியிடம் முதல்வர் கோப்பையை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.;
2023 ஆம் ஆண்டின் சிறந்த காவல் நிலையமாக தமிழக முழுவதும் 46 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. அதனை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக டிஜிபி வெங்கட்ராமன் போளூர் காவல் ஆய்வாளர் அல்லிராணியிடம் முதல்வர் கோப்பையை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.