வலம்புரி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.;
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி 17 வது வடிவேல் தெருவில் உள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதி காலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்ற நிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.