திருவேங்கடத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், எலும்பு மூட்டு சிகிச்சை, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் மகளிருக்கான மருத்துவம், மனநலம், கண் மருத்துவம், கருப்பை புற்றுநோய் பரிசோதனை, குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், தோல் மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பாக மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கி, மருந்து மாத்திரைகளை வழங்கினர். இந்த முகாமில் இலவசமாக இ.சி.ஜி., எக்கோ, ஸ்கேன் எடுக்கப்பட்டன. மேலும், சிறுநீர், ரத்தம், சளி ஆகியவற்றுக்கு இலவச பரிசோதனை நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.